Thursday 9 February 2012

பள்ளியில் ஆசிரியை கொலை

சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த உமா மகேஸ்வரியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் முகமது இர்பான் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்தான்.

தன்னைப் பற்றி பெற்றோரிடம் புகார் கூறியதாலும், பெற்றோரை அழைத்து வரும்படி தொந்தரவு செய்ததாலும், மதிப்பெண் குறைத்து போட்டதாலும் ஆசிரியையை குத்திக்கொன்றதாக மாணவன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.



எல்லா புகழும் தொலைகாட்சியையும்,   திரயுலகையுமே  சாரும்.  என்னதான் திரைத்துறையினர்  நாட்டில் நடக்கும் சம்பவங்களின் பிரதிபலிப்புதான் சினிமாவும் சீரியலும் என்று சப்பைக்கட்டு கட்டினாலும்,  இந்த இரண்டும் தான் மாணவர்களின் வாழ்கையை சீரழிக்கிறது. உதாரணமாக விஜய் டிவியில் கனா காணும்  காலங்கள் தொடரில் கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்களை சீரியலாக ஒளிபரப்புகிறார்கள். என்னதான் கல்லூரியில் நடக்ககூடியவையாக இருந்தாலும் அதை பார்ப்பது கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, குடும்பமாக  அதை பார்க்கிறார்கள் குறிப்பாக பள்ளி மாணவர்களும் அதை பார்க்க தவறுவதில்லை. அப்படி இருக்கும் வேலையில்  அந்த பள்ளி மாணவர்கள் கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்களை பள்ளியிலேயே செய்ய விளைகிறார்கள் மேலும் அதில் தவறேதும் இல்லை என்ற மனோபாவம் அவர்களிடம் வந்து விடுகிறது.  இதன் தாக்கமே இந்த கொலை என்று கூட கூறலாம்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு "உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூடமுடியாது" அது போல் மீடியாக்களில் காண்பிப்பவர்கள் காண்பிக்கட்டும் பெற்றோர்களே நீங்கள் டிவி பார்க்கும் நேரத்தை தியாகம் செய்யத்தான் வேண்டும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக... செய்வீர்களா?

Friday 3 February 2012

தமிழக அரசு கவணிக்குமா....

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்

ஒரு வருடத்தில் விபத்தில் உயிரிழப்பவரின் எண்ணிக்கை மட்டும்  ஐந்து சுனமிக்களுக்கு சமம் என ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது....


ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஞ்சி மாவட்டத்தில் சமீபகாலமாக நிறைய விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதில், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தவர்களே விபத்தில் சிக்கி அதிகளவில் உயிரிழந்தது தெரியவந்தது.

எனவே ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதை செயல்படுத்தும் ஒரு வழியாக இந்த நூதன உத்தரவை அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் ராஞ்சி மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அறிவிப்பு பலகைகளை பெட்ரோல் பங்குகளில் வைக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.இந்த நூதன உத்தரவு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமும் பின்பற்றலாமே...

Monday 23 January 2012

அணு உலை போராட்டத்தை பொறுத்தவரை சில கேள்விகள்......


--> இவர்கள் போராட்டத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் ஜப்பான் அணு உலைகளைகளில் நடந்த விபத்தினால் அன்றைய தினத்தில் ஜப்பான், அணு உலைகளுக்கு பதிலாக மாற்று வழியை காணவேண்டும் என்று ஜப்பான் கூறியதை கெட்டியாக பிடித்துகொண்டு இங்கும் அணு உலையை மூடவேண்டும் என்று முழங்கி வந்தார்கள், அனால் இன்று ஜப்பானே தனது நில நடுக்க நிவாரணப்பணிகளை முடித்துக்கொண்டு அதன் அணு உலைகளை செயல்படுத்த துவங்கி விட்டது. அனால் இங்கு இன்னும் அடிப்படை பணிகளை கூட முடிக்க விடாமல் தடை போட்டு வருகிறார்கள்.

--> சரி அணு உலைகளினால் ஏற்படும் பேராபத்தை எதிர்த்துதான் இவர்களது முழக்கம் 
என்பது உண்மையானால் ஏன் இவர்கள் கல்பாக்கம் அணு உலைகளை மூடுவது சம்மத்தமாக எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

--> ஆபத்து என்று எடுத்துக்கொண்டால் சாதாரண கொசு வர்த்தி கோயிலினால் கூட கான்செர் பரவும் ஆபாயம் உள்ளதென தெரிவிக்கிறது ஒரு ஆய்வறிக்கை அப்படியென்றால் இந்த சகோதரர்கள் இதனை ஏன் எதிர்கவில்லை, மேலும் நகர வாசிகளை விட மீனவ நண்பர்களுக்கு கடலில் வரும் சுனாமியை பற்றி நன்கு அறிவர் அப்படி என்றால் அவர்கள் என்ன எப்போதோ  வரும் சுனாமிக்காக தங்களது இருப்பிடத்தை காலி செய்து விட்டு வந்துவிட்டனரா என்ன? இல்லையே.

--> அணு உலைகளின் பணிகள் முழுவதுமாக முடிந்து மின்சாரத்தில் தமிழகம் தன்னிறைவு பெரும் வேலையில் அணு உலைகள் வேண்டாம் என்று போடும் கோஷம் சரியானது அல்ல, தற்போதைக்கு அணு உலைகளை செயல் படுத்த துவங்கி விட்டு மேலும் புதிய அணு உலைகளுக்கு செலவு செய்யாமல் அரசை மாற்றுவழி காணத தூண்டுகிற இயக்கமாக மாறினால் தமிழகம் இவர்கள் பின்னல் நிற்கும்.....

Friday 6 January 2012

மருத்துவர்கள் போராட்டம் நியாயமானதா....

மக்களே போராடும் முன் எதற்காக போராடுகிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் கொலை செயப்பட்ட டாக்டர் அறுவை சிகிச்சை செய்பவர் அல்ல மேலும் அவர் ஒரு அனச்ச்தீசிய மருத்துவர் ஆவார் (டெக்கான் குரோனிகல் - 05-01-12).

  அவர் எப்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என்னதான் அவர் மருத்துவ துறையை சார்ந்தவராக இருந்தாலும் அவர் அந்த துறையில் நிபுணத்துவம் இல்லாமல் ஒரு சிகிச்சையில் அவரர்  ஈடுபடும் போது அவரு போலி மருத்துவருக்கு சமமானவரே.

அவ்வாறு நம் எடுத்துக்கொண்டால் இபொழுது நாடே போரடிகொண்டிருக்கும் போராட்டம் ஒரு போலி மருத்துவருக்காகவா....
ஒரு உயிர் பலி என்பது ஏற்க முடியாதுதான் ஆனால் அதற்காக அந்த மருத்துவரால் இறந்த உயிர் என்பது உயிரில்லையா....

எனவே என்னுடைய மேலான கருத்தெல்லாம் போராட்டம் வேண்டாம்   என்பதே... இறந்த மருத்துவரை மட்டும் அல்ல இறந்த அந்த கர்ப்பிணியையும் சகோதரியாக பாருங்கள் ப்ளீஸ்....

Wednesday 28 December 2011

..நெய்யாறு இடதுகரை சானல் தண்ணீருக்கு பணம் கேரள அரசு மீது காங்., எம்.எல்.ஏ., பாய்ச்சல்


மார்த்தாண்டம் : நெய்யாறு அணைக்கு குமரி மாவட்டத்தில் இருந்து தண்ணீர் செல்வதால் கேரள அரசுக்கு எப்படி தண்ணீருக்கு பணம் கொடுக்க முடியும் என்று விஜயதரணி எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பியுள்ளார்.நெய்யாறு இடதுகரை சானல் 1965ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த சானலுக்கு நெய்யாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 2004ல் தண்ணீர் திறந்து விடுவது திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட 9 வருவாய் கிராமங்கள் பாதிக்கப்பட்டது.தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியது. விஜயதரணி எம்.எல்.ஏ., கேரள முதல்வரை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இது குறித்து விஜயதரணி எம்.எல்.ஏ., மார்த்தாண்டத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:நெய்யாறு அணைக்கு குமரி மாவட்ட மலையோர பகுதியில் இருந்து கருப்பையாறு வழியாக தண்ணீர் செல்கிறது. இந்த அணைக்கு செல்லும் தண்ணீரில் 40 சதவீதம் குமரி மாவட்டத்தில் இருந்து செல்கிறது. இதனால் தான் அன்று காமராஜர் ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் கேரள அரசு தற்பொழுது தண்ணீர் திறந்துவிட பணம் கேட்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.தண்ணீர் கேட்பதற்கு நமக்கு உரிமை இருந்தும், கேரள அரசு தண்ணீர் தர மறுக்கிறது. இது தொடர்பாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆன்றணி ஆகியோரை சமீபத்தில் டில்லியில் சந்தித்து வலியுறுத்தினேன்.இந்நிலையில் உறுதியான முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று கேரளாவில் உள்ள அனைத்து கட்சிகளும் வரிந்துகட்டி நிற்பது கண்டிக்கத்தக்கது. முல்லை பெரியாறு அணை நல்ல நிலையில் உள்ளது. நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் திறந்துவிடாத கேரள அரசு முல்லை பெரியாறு அணை பிரச்னையை தீர்க்க முயற்சி செய்யாது.இந்த பிரச்னை சுமூகமாக தீர்ப்பதற்கு மத்திய அரசு தலையிட வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை கேரள அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு விஜயதரணி எம்.எல்.ஏ., கூறினார்.

 "2004ஆம் ஆண்டிற்குப் பிறகு (தமிழ்நாட்டில் இருந்து 39 மக்களவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் - திமுக அணியை தேர்வு செய்த நிலையில்) நெய்யாறு அணையில் இருந்து சொட்டு தண்ணீர் கூட இடதுபுறக் கால்வாயில் கேரள அரசு திறந்துவிடவில்லை. விளவங்கோட்டில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்துவந்த தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏனென்று கேட்கவில்லை மத்திய அரசு.

நெய்யாறு அணைக்கு நீர் வரத்து ஒருபோதும் குறையவில்லை. ஆயினும் தமிழ்நாட்டிற்கு தண்ணீரை மறுத்தது கேரள அரசு. தண்ணீர் வரத்து சிறப்பாக இருந்தும் விளவங்கோட்டிற்கு தண்ணீர் மறுத்தது கேரள அரசு. நெய்யாறு அணையில் இருந்து உபரி நீர் பூவாற்றில் ஓடி அரபிக் கடலில் கலந்தது - வெப் துனியா"
"இந்த கேரளா அரசு தான் புதிய ஆணை கட்டி அதிலிருந்து தமிழகத்துக்கு வேண்டிய அளவு தண்ணீர் கொடுப்பதாக உறுதி அளித்து பேச்சுவர்த்தைக்கு தமிழக அரசை அழைக்கிறது."

Wednesday 21 December 2011

யுரெனியம் உள்ளது அணு மின் நிலையங்கள் இல்லை!


உலகிலுள்ள யுரேனிய வளத்தில் 40 விழுக்காடு ஆஸ்ட்ரேலியாவில்தான் உள்ளது. இந்தியாவைப் போல் அந்நாட்டு எரிசக்தித் தேவையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்நாட்டில் அணு மின் சக்தி நிலையம் என்று ஒன்று கூட இல்லை. யுரேனியத்தைப் போல் நிலக்கரியும் அதிகமாக உள்ள நாடு என்பதால் அவர்கள் அனல் மின் நிலையங்களைத்தான் அதிகம் அமைத்துள்ளார்கள். அது கரியமிள வாயுவை அதிகம் வெளியேற்றக் கூடியது அல்லவா? எனவே தூய்மையான எரிசக்தி பற்றி பேசும் ஆஸ்ட்ரேலியா அணு சக்தி மின் தயாரிப்புக்கு நாடவில்லை! சூரிய சக்தியையே நாடுகிறது.

அங்குள்ள புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பான்மை வீடுகளில் கூரைகளில் (அங்குள்ள வீடுகளில் மொட்டை மாடிகள் இல்லை) சூரிய ஒளியை வாங்கும் சூரிய சக்தி அமைப்புகளை (Photo Voltaic panels) நிருவியுள்ளார்கள். இதனை நிறுவ அங்குள்ள வங்கிகள் கடன் அளிக்கின்றன. சூரிய சக்தியால் உருவாகும் மின் சக்தி தனி கம்பிகளின் மூலம் மின் தொகுப்பிற்குச் செல்கிறது. எவ்வளவு மின்சாரம் ஒவ்வொரு இல்லத்திலிருந்தும் மின் தொகுப்பிற்குச் செல்கிறது என்பதற்கு மின் அளவைகள் பொறுத்தப்பட்டுள்ளன. இல்லத்திற்குத் தேவையான மின்சாரம் பொதுத் தொகுப்பில் இருந்துதான் நேரடியாக வழங்கப்படுகிறது. அதற்கு தனி மின் அளவை உள்ளது. சூரிய சக்தி மின்சார அளவை, இல்லப் பயனீட்டு அளவில் இருந்து கழித்துக்கொண்டு மீதமுள்ளதற்குத்தான் கட்டணம் வசூலிக்கிறார்கள். மின் தயாரிப்பு கூடுதலாக இருந்தால் வீட்டிற்கு வரவுதான்.

இப்படி மக்களோடு சேர்ந்துகொண்டு சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆஸ்ட்ரேய நாடு, 2000வது ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின்போது நிறுவப்பட்ட ஒவ்வொரு மின் விளக்குக் கம்பங்களிலும் சூரிய சக்தி அமைப்பு சேர்த்தே நிறுவியுள்ளது (படத்தை பார்க்கவும்). இப்படி தனது நாட்டிற்கு தூய்மையான மின் சக்தி தயாரிக்க சூரிய ஒளியை நாடும் ஆஸ்ட்ரேலியா, இந்தியாவிற்கு யுரேனியம் விற்கிறது!

இந்தியப் பிரதமரும் சொல்கிறார், புகழ் பெற்ற விஞ்ஞானி அப்துல்கலாமும் சொல்கிறார், மின்சாரத்திற்கு அணு சக்தி தூய்மையான எரிசக்தி என்று!

Thanks - web dunia

Monday 12 December 2011

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

சாப்பிடாமல் அடம் பிடிப்பது குழந்தைகளின் சுபாவம். அதை மாற்ற முடியாமல் திண்டாடுவது அம்மாக்களின் சுபாவம் என்றாகிவிட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல.

குழந்தைகள் முடிவெடுக்கட்டும் :-

எதையாவது சமைத்துவிட்டு "இதை சாப்பிடப் போறியா இல்லையா?" என்று குழந்தைகளை மிரட்டுவதை மறந்துவிடுங்கள். நாளை அல்லது அடுத்த ஒரு வாரம் உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட விரும்புகிறார்கள் எனபதைக் கேட்டு சமைத்தால் அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பு இருக்காது. அவர்கள் கேட்பதெல்லாம் சமைக்க நேரமில்லை என்றால் அவற்றை விடுமுறை நாட்களில் சமைப்பதாக கூறலாம்.

இந்த வம்பே வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2 அல்லது 3 உணவு வகைகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி குழந்தைகளிடம் கேட்கலாம். குழந்தைகளிடையே எதை சாப்பிட வேண்டும் என்ற சண்டை ஏற்படலாம். அப்படி ஏற்படாமல் இருக்க குழந்தைகளிடையே உருவாகும் போட்டியை தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சமையலில் குழந்தைகள் உதவட்டும் :-

நீங்கள் சமைக்கும்போது உங்கள் குழந்தைகளின் உதவியை நாடுங்கள். அவர்கள் வயதிற்கேற்ப சமையலில் உங்களுக்கு உதவும்படி கேட்டு கொள்ளுங்கள். பரிமாறும் போது, குழந்தை உதவியதை மறக்காமல் அனைவரிடமும் சொல்லுங்கள். நீங்களும் மற்ற குடும்பத்தினரும் குழந்தையைப் பாராட்டுங்கள். இப்போது குழந்தை முகம் சுளிக்காமல் சாப்பிடுவதைப் பாருங்கள்!

வித்தியாசமாக சாப்பிடட்டும் :-

பெரியோர்கள் சாப்பிடுவதைப் போலவே குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். "சப்பாத்தியுடன் ஜாம் யாராவது சாப்பிடுவாங்களா?" "சீஸ் சாதத்துடன் சாப்பிடக் கூடாது!" இப்படி சொல்வதைவிட்டு அவர்கள் விரும்பும் வகையில் உணவை கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பசிக்கும் போது சாப்பிடட்டும் :-

நாம் சாப்பிடும் நேரங்களில் குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பதால் தான் நாம் அவர்களை வற்புறுத்துகிறோம். பசித்தால் அதைத் தாங்கிக் கொண்டு எந்தக் குழந்தையும் சாப்பிடாமல் இருக்காது! நம் வற்புறுத்தல் அவர்களுக்கு சாப்பிடும் பழக்கத்தைவிட உணவை வெறுக்கும் பழக்கத்தையே உண்டாக்கும். இதை தவிர்க்க குழந்தைகள் விரும்பி கேட்கும் போது உணவு கொடுத்தால் அவர்களுக்கு உணவைக் கண்டால் ஓட வேண்டும் என்ற நினைப்பு மாறிவிடும்.

ஷ்ஷ்ஷ்!! தெரியாமலே போகட்டும் :-

பல சமயங்களில் சத்தான உணவு வகைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதற்காக அவற்றை ஒதுக்கிவிட வேண்டாம். மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி / துறுவி அல்லது நன்றாக அரைத்து / மசித்து அவர்களுக்குப் பிடித்த உணவுடன் கலந்துவிடலாம். இவற்றைக் குறைவானஅளவில் சேர்ப்பது நல்லது. அதிக அளவில் கலந்து ருசி மாறிவிட்டாலும் கவலை வேண்டாம். இருக்கவே இருக்கு தக்காளி சாஸ், சீஸ் போன்றவை!

மேலே உள்ள குறிப்புகளை பின்பற்றினால் ஒரே நாளில் அல்லது வாரத்தில் குழந்தைகள் மாறிவிடுவார்கள் என்று எண்ண வேண்டாம். தொடர்ந்து பின்பற்றுங்கள். ஒரு மாதத்தில் நீங்களே மாற்றத்தைப் பார்க்கலாம்.