உலகிலுள்ள யுரேனிய வளத்தில் 40 விழுக்காடு ஆஸ்ட்ரேலியாவில்தான் உள்ளது. இந்தியாவைப் போல் அந்நாட்டு எரிசக்தித் தேவையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்நாட்டில் அணு மின் சக்தி நிலையம் என்று ஒன்று கூட இல்லை. யுரேனியத்தைப் போல் நிலக்கரியும் அதிகமாக உள்ள நாடு என்பதால் அவர்கள் அனல் மின் நிலையங்களைத்தான் அதிகம் அமைத்துள்ளார்கள். அது கரியமிள வாயுவை அதிகம் வெளியேற்றக் கூடியது அல்லவா? எனவே தூய்மையான எரிசக்தி பற்றி பேசும் ஆஸ்ட்ரேலியா அணு சக்தி மின் தயாரிப்புக்கு நாடவில்லை! சூரிய சக்தியையே நாடுகிறது.இப்படி மக்களோடு சேர்ந்துகொண்டு சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆஸ்ட்ரேய நாடு, 2000வது ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின்போது நிறுவப்பட்ட ஒவ்வொரு மின் விளக்குக் கம்பங்களிலும் சூரிய சக்தி அமைப்பு சேர்த்தே நிறுவியுள்ளது (படத்தை பார்க்கவும்). இப்படி தனது நாட்டிற்கு தூய்மையான மின் சக்தி தயாரிக்க சூரிய ஒளியை நாடும் ஆஸ்ட்ரேலியா, இந்தியாவிற்கு யுரேனியம் விற்கிறது!
இந்தியப் பிரதமரும் சொல்கிறார், புகழ் பெற்ற விஞ்ஞானி அப்துல்கலாமும் சொல்கிறார், மின்சாரத்திற்கு அணு சக்தி தூய்மையான எரிசக்தி என்று!
Thanks - web dunia
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.